எங்களுடைய குருநாதர் ஸ்வாமிஜி ஞானானந்த மஹராஜின் பொற்பாதங்களை வணங்கி ஒவ்வொரு ஜீவனும் விடுதலைக்காக பயணிக்கும் அப்படிப்பட்ட அன்பர்களுக்கு இந்த இணையதளத்தை சமர்ப்பிக்கிறோம் .இந்த வெப்சைட் சொல்ல கூடிய சாராம்சம் தேடுதலில் இருப்பவர்கள் தேடுபவரை பார்த்தால் அப்படி ஒரு நபர் உங்களில் கிடையாது .இருப்பது வெறுமை (emptiness) மட்டுமே .இதை தெரிந்த மாத்திரத்தில் தெரிபவன் இல்லை இருப்பது மட்டுமே . அப்படி இருப்பதை ஆத்மா என்று பெயர் கொடுத்தால் கூட இதை பற்றி பேசுபவன் வந்துடுவான் எனவே எதுவும் இல்லை என்ற சொல் கூட கிடையாது . இந்த இணையத்தளமூலம் 13-ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் வாழ்ந்த மராட்டிய தத்துவஞானி மற்றும் யோகி ஆவார் ஸ்ரீ ஞானேஸ்வர் மகாராஜ் (1275–1296). இவர் மௌலி (அம்மா) என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். வர்காரி (Varkari) பக்தி இயக்கத்தின் முக்கிய தூணாகக் கருதப்படும் இவர், வெறும் 21 வயதில் ஆளந்தியில் ஜீவசமாதி அடைந்தார்.
இந்த வெப்சைட் சொல்லக் கூடிய சாராம்சம்: தேடுதலில் இருப்பவர்கள் தேடுபவரைப் பார்த்தால், அப்படி ஒரு நபர் உங்களில் கிடையாது. இருப்பது வெறுமை (emptiness) மட்டுமே. இதைத் தெரிந்த மாத்திரத்தில் தெரிபவன் இல்லை; இருப்பது மட்டுமே. அப்படி இருப்பதை "ஆத்மா" என்று பெயர் கொடுத்தால் கூட, இதைப் பற்றி பேசுபவன் வந்து விடுவான். எனவே, "எதுவும் இல்லை" என்ற சொல் கூட கிடையாது.

இந்த இணையத்தளமூலம் 13-ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் வாழ்ந்த மராட்டிய தத்துவஞானி மற்றும் யோகி ஆவார் ஸ்ரீ ஞானேஸ்வர் மகாராஜ். இவர் மௌலி (அம்மா) என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். வர்காரி (Varkari) பக்தி இயக்கத்தின் முக்கிய தூணாகக் கருதப்படும் இவர், வெறும் 21 வயதில் ஆளந்தியில் ஜீவசமாதி அடைந்தார்.

பகவத் கீதைக்கு எத்தனையோ விளக்கவுரை இருக்கிறது ஆனால் ஒவ்வொன்றும் திருக்குறளில் சொல்வது போல் "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" அவர் அவர் நிலை கேட்ப எழுதி இருக்கிறார்கள் .ஆனால் ஸ்ரீ ஞானேஸ்வர் மகாராஜ் பகவத் கீதையின் தத்துவத்தை சாமானிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், மராத்திய மொழியில் "ஞானேஸ்வரி" என்ற பெயரில் எழுதி இருக்கிறார் .இதை தமிழில் பாவர்த்ததீபிகை என்ற "ஞானேஸ்வரி" என்ற பெயரில் திரு.கோதண்டராமய்யர் அவர்கள் கிபி 1896 லே கருத்து கொஞ்சம் கூட மாறாமல் மராத்தியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார் .இந்த கீதை தான் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ள கீதை மொழிபெயர்ப்பு ஆகும் .ஏன் இவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று சொல்கிறோம் என்றால் கீதை பொதுவாக ஒரு மனிதனின் ஜீவன் முக்த நிலையை அடைய சொல்லப்பட்டதாகும் .மற்ற உரைகள் பொறுத்தவரை அவை உலக பரமனா விளக்கஉரைகளாகும் அனால் ஞானேஸ்வரி முற்றிலும் வேறுபட்டது .இது சொரூபநிலையில் இருந்து விலகாமல் பேசுகிறது . கீதையில் கண்ணபிரான் என்ன சொன்னாரோ அதை அப்படியே சொல்கிறது . இரண்டு சுலோகங்களை உதாரணமாக பார்க்கலாம்


மற்ற விளக்க உரையில் சமமா பார்ப்பார்கள் என்றல் பார்ப்பவன் ,பார்க்கப்படும் பொருள் ,இரண்டையும் சொல்பவன் இப்படி வைத்து கொண்டு விளக்கம் கொடுப்பார்கள் ஆனால் இவரோ எந்த அறியாமை கொண்டு நாம வந்துஇருக்கிறோமோ அந்த மூல நான் என்ற அகங்காரம் போய்விட்டாள் என்று ஜீவன் முக்த நிலைமையை எடுத்து கூறுகிறார் .இவ்வாறு கீதையின் சாராம்சத்தை எடுத்து கூறுவது என்பது இந்த நூலில் காண முடிகிறது .எனவே தான் இந்த "ஞானேஸ்வரி" கீதை விளக்க உரை அனைத்திலும் சிறந்தது என்று சொல்கிறோம் .இப்படி உயர்ந்த விளக்கம் என்பது ஒரு தன்னை உணர்ந்த மகான்களால் மட்டுமே உள்ளதை உள்ளபடி சொல்லமுடியும் .இப்படி பட்ட கீதை தேவைப்படுபவர்கள் நாங்கள் கொடுக்கக்கூடிய முகவரிக்கு கேட்டு வாங்கிக்கொள்ளாம் .
SRI RAMANAM BANK
Ramamanthiram, #2, Vinayagam St, Perambur,
Vivekanandapuram, West Mambalam, Chennai, Tamil Nadu 600033
Phone: 044 2489 3736
"ஞானேஸ்வரி" பகவத் கீதை ஒருவர் ஒருவருக்கு சொன்ன உபதேசம். ஆனால் இவருடைய உள் அனுபவத்தில் இருந்து சொல்லப்பட்ட, வேதங்களுக்கு இணையான நூல் "அமிர்தனுபாவம்".
இது ப்ரம்மம், இருக்கிறது, ஆத்மா என்று கூட பெயர் வைப்பதில்லை. கொஞ்சம் கூட இவர் "நான்" என்கிற தனித்தன்மை வைப்பதில்லை. இந்த நூலைப் படிக்கும் பொழுதே "நான்" என்ற தனித்தன்மை கரைந்துவிடும். இது படித்து அடுத்தவர்களுக்கு பாடம் எடுக்கும் நூல் கிடையாது. தனித்தன்மையின் சாம்பல் கூட மிஞ்சாத ஒரு பொக்கிஷம்.
இந்த நூல் இதுவரை தமிழில் கிடையாது .ஆனால் திருவண்ணாமலையில் ஒரு ஆத்ம சாதகர் ஒருவருக்கு ஸ்ரீ ஞானேஸ்வர் மகாராஜ் அவருள் இருந்து தமிழ் மொழியில் கொஞ்சம் கூட தத்துவம் மாறாமல் மொழிபெயர்த்துள்ளார் .இப்படி பட்ட நூல் கிடைக்க நம் தமிழ் சமூகம் கொடுத்த அதிர்ஷ்டம் ஆகும் .இப்படி பட்ட நூல் அனைவருக்கும் கிடைப்பதற்காக பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு ஏதுவாக இந்த இணையத்தளத்தில் கொடுத்துளோம் . இதுதவிர, சாங்தேவ் பாசாஷ்டி, ஹரிபாத் (Abhangas) ஆகியவற்றை இயற்றியுள்ளார். இதுவும் பதிவிறக்கம் செய்யும் பொருட்டு கொடுத்துளோம்.
நீ மேலும் மேலும் ஆழமாகச் சென்றால், இறுதியில் உன்னுள் ஒரு வெறுமை மட்டுமே இருப்பதை உணர்வாய்.
அந்த நிலையில், நீ ஒரு பூஜ்ஜியம் (Zero) என்பதை உணர்வாய்.
அதேதான் ஞானோதயத்தின் (Enlightenment) உச்ச நிலை.
அங்கு உன் அகங்காரம் (Ego) முற்றிலும் மறைந்து விடுகிறது.
உன் பேராசை, பற்றுதல், ஆசைகள் அனைத்தும் கரைந்து போகின்றன.
“நான்” என்ற தனி மனித உணர்வு அங்கே இல்லை.
ஒரு நபராக நீ அங்கே இல்லை.
அந்த நிலைதான் வெறுமை. அந்த வெறுமை ஒரு இல்லாமை அல்ல; அது ஒளி, உயிர், எல்லையற்ற நிலை.
புத்தர் இந்த நிலையையே
(Nirvana) என்று அழைத்தார்.
நிர்வாணம் என்றால் — எதுவுமில்லாமை.
ஆனால் அது அழிவு அல்ல; அது எல்லாவற்றையும் தாண்டிய நிலை.

உங்களுக்கு ஒரு விஷயம் நன்கு தெரியும். உங்களுடைய இந்த நான் என்பது நீங்கள் அறிந்ததே. ஆகவே இந்த நான் எங்கு உள்ளது யார் இது என்று உங்களுள் தேடி கொண்டு இருக்கும் போதே இப்படி நான் ஒன்று கிடையவே கிடையாது என்பதை காண்பீர்கள். (முற்றிலும் தப்பான வெறும் தோற்றமே நான் என்பது ஒன்று உண்டு என்பது உங்களது கற்பனையே.